Publish Date: Wed, 30 Dec 2009 (12:22 IST)
Updated Date: Wed, 30 Dec 2009 (12:22 IST)
தேவையான பொருட்கள் :
இறால் - 500 கிராம்
தேங்காய் - 1 கப்
ரொட்டித்தூள் - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் -1
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
தயாரிக்கும் முறை :
இறாலை அரைக்க வேண்டும். பச்சையாக அரைப்பதைவிட கொஞ்சம் நீரில் போட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு எடுத்து அரைப்பது எளிதாக இருக்கும்.
தேங்காயைத் துருவவும். வெங்காயத்தைத் தட்டி வைக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசையவும். கட்லட்டாகத் தட்டிக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டு லேசாகச் சிவக்கும் அளவுக்கு வேகவிட்டு எடுக்கவும்.