தேவையான பொருட்கள்:
	 
	மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
 
 			
 
 			
					
			        							
								
																	
	நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
	நாட்டுக்கோழி - 1/2 kg
	பச்சை மிளகாய் - 1
	தேங்காய் - 1 துண்டு
	பட்டை, கிராம்பு - தலா 2
	இஞ்சி - சிறிய துண்டு
	பூண்டு பற்கள் - 6
	சின்ன வெங்காயம் – 8
	கொத்தமல்லி தழை - சிறிதளவு
	கறிவேப்பிலை - தேவையான அளவு
	மஞ்சள் தூள் - தேவையான அளவு
	உப்பு - தேவையான அளவு
	செய்முறை:
	 
	நாட்டுக்கோழி துண்டுகளை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தப்படுத்தி வைத்து கொள்ளவும். மேலே கூறப்பட்டுள்ள மிளகு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கிராம்பு, பட்டை, தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸ்யில் இட்டு நன்றாக மைய அரைத்து  கொள்ளவும்.
	அடி கனமான வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த அரைத்த விழுதை அதில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கழுவிய நாட்டுக்கோழி துண்டுகளை அந்த மசாலாவில் போட்டு நன்றாக பிரட்டி தேவையான அளவு கல் உப்பு அல்லது சாதாரண  உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு அடுப்பை சிம்-இல் வைத்து ஒரு அரை மணி நேரம் வேக விடவும்.
	 
	தண்ணீர் சிறிது சேர்த்து கொள்ளலாம். நாட்டுக்கோழி நன்றாக வெந்ததும் அதை தண்ணீர் இல்லாமல் நன்றாக வறுவல் பதத்திற்கு பிரட்டி கறிவேப்பில்லை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். சுவையான நாட்டுக்கோழி மிளகு வறுவல் தயார்.