Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுவையான முள்ளங்கி இறால் குருமா

Advertiesment
இறால்
இறால் உணவு என்றால் பிக்காதவர்கள் குறைவு தான். அதன் சுவை அனைவரையும் திரும்ப திரும்ப தன் பக்கம் ஈர்க்கும். நாம் சமைக்க இருக்கும் முள்ளங்கி இறால் குருமா நிச்சயம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சுண்டி இழுக்கும்.
 
தேவையான பொருட்கள்:
 
* இறால் - 1/2 கிலோ
* முள்ளங்கி - 1/4 கிலோ
* தயிர் - 1/2 கப்
* வெங்காயம் - 200 கிராம்
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 200 கிராம்
* தேங்காய் துருவல் - கால் மூடி
* பட்டை - 2
* லவங்கம் - 2
* இஞ்சி - சிறு துண்டு
* பூண்டு - 4 பல்
* எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
* இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 
* வெங்காயம், தக்காளி, மிளகாய் முள்ளங்கியை நறுக்கிக் கொள்ளவும்.
 
* தேங்காயை அரைக்கவும், இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.
 
* கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
 
* பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இறாலையும் சேர்த்து வதக்கவும்.
 
* பின்னர் முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி நன்றாக வேகவிடவும்.
 
* தேவையான உப்பு, அரைத்த தேங்காயின் பாலையும் அதனுடன் சேர்க்கவும்.
 
* முள்ளங்கி மற்றும் இறால் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil