Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் !!

மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் !!
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (15:03 IST)
தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/2 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து குறைவான தீயில் வைத்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, பின் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
 
நெய்யானது பிரிய ஆரம்பித்தால், அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிக்கன் துண்டுகள், உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
 
பின் மூடியைத் திறந்து, அதில் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5-6 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கனானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதில் மீதமுள்ள கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்து கொள்வதால் உடல் எடை குறையுமா...?