Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் சீரக சம்பா சிக்கன் பிரியாணி செய்ய !!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் -2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1

செய்முறை:
 
முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 
 
அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தனியாத்தூள், தயிர், இஞ்சி, பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் உற வைத்துக் கொள்ளவும்.
 
பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உறவைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
 
வேகவைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிமிழ் வைத்து  இறக்கவும். சிக்கன் பிரியாணி தயார்.
 
குறிப்பு: சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசிக்கு, ஒன்றை கப் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

அடுத்த கட்டுரையில்
Show comments