தேவையான பொருட்கள்:
வஞ்சரம் மீன் -1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
சோயா சாஸ் - அரை டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
சில்லி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எலூமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
சிவப்பு கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் தயிர், கரம் மசாலா, மிளகாய் தூள், இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய், சில்லி சாஸ், எலூமிச்சை சாறு, சிவப்பு கலர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். ஒவ்வோரு மீனையும் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை தடவி எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒவ்வொரு மீனாக வைத்து, திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்கு வெந்து சிவந்து வந்ததும் எடுத்து விடவும். இதனை தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்க்கவும். வெங்காயம் இளஞ்சிவப்பு நிறமாக மாறத் தொடங்கும் போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாக கலந்து வெப்பத்தை குறைக்கவும். பின்னர் வறுத்த மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.
இதற்கிடையில், 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளவரை 4 டீஸ்பூன் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். மீன் கலவையுடன் சேர்த்து, சாஸ் கெட்டியாகி, மீன் மேல் பூசும் வரை சமைக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள் அல்லது வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். சுவையான சில்லி பிஷ் தயார்.