Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அயிரை மீன் - அரை கிலோ
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
புளி - 25 கிராம்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - அரை தம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் கறிவேப்பிலை, சின்ன  வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்குங்கள். அதில் தக்காளியை விழுதாக அரைத்துச்  சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்குங்கள். 
 
பிறகு புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக்  கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில்  கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுநீரை அடக்கி வைப்பதா? ஆபத்தான விளைவுகள் காத்திருக்கின்றன - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஒரு சோப் பல நபர்களா? சரும நலன் காக்க விழிப்புணர்வு தேவை!

முடி உதிர்வுப் பிரச்சனைகளுக்குச் சித்த மருத்துவத் தீர்வுகள்: அலோபேசியா, பூஞ்சைத் தொற்று, பொடுகு நீங்க எளிய வழிகள்!

நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இரவு உணவில் சேர்க்க வேண்டிய 5 முக்கிய உணவுகள்!

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments