Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையில் எண்ணெய் வழியும் முகத்திற்கு ஏற்ற துளசி பேஸ்பேக் எவ்வாறு தயாரிப்பது...

Webdunia
மருத்துவ குணம் நிறைந்த துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் தயாரித்து, சரும பிரச்சனைகள் நீங்கலாம் என தெரிந்து கொள்வோம். விடுமுறை நாட்களில் போட்டு, கோடையிலிருந்து சருமத்தை காப்பதோடு, சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 
ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.
 
சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.
 
சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

அடுத்த கட்டுரையில்
Show comments