Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டுக்கால் குழம்பு செய்ய தயாரா...?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (14:59 IST)
தேவையானவை:
 
ஆட்டுக்கால் - 4 கால்கள்
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் - ஒன்று (சிறியது)
தக்காளி - 2
இஞ்சி - 2 இன்ச் நீள துண்டு
பூண்டு - 5 பல்
கறிவேப்பில்லை - சிறிதளவு
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
அன்னாசிப் பூ  - 2
மிளகாய்த்தூள்  - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:
 
ஆட்டுக்கால்களை நன்றாகக் கழுவி சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். துருவிய தேங்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு,  அன்னாசிப் பூ இவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். குக்கரில் ஆட்டுக்கால் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து, மூழ்கும்  வரை தண்ணீர் ஊற்றி மூடி, வெயிட் போட்டு 40 நிமிடங்கள் வேகவிடவும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய தக்காளி, நறுக்கிய  ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கி, கலவையை அதில் சேர்த்து 5-7 நிமிடங்கள் வேகவிடவும். ஆட்டுக்கால் குழம்பு தயாரானதும் சாதத்துடனோ இட்லி, தோசையுடனோ சூடாகப் பரிமாறவும்.
 
குறிப்பு: ஆட்டுக்கால்கள் வேக அதிக நேரமெடுக்கும். இதனுடன் கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்தும் சமைக்கலாம். எலும்புகள் கடிக்க எளிதாக ஆகும்வரை வேகவிடவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments