Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை: யார் பொறுப்பு?

சித்த மருத்துவ மாணவிகள் தற்கொலை: யார் பொறுப்பு?

Ashok

, ஞாயிறு, 24 ஜனவரி 2016 (17:13 IST)
விழுப்புரம் அருகே சித்த மற்றும் இயற்கை கல்லூரியில் படித்து வந்த 2 ஆம் ஆண்டு மாணவிகள் 3 பேர் ஒரே புடவையை சுற்றி தற்கொலை செய்த கொண்டனர். இந்த தற்கொலை அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 


விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் SVS இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 20 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
 
அதில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் கல்லூரி மாணவிகள் சென்னையை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா, திருவாரூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று கல்லூரியின் எதிரில் உள்ள விவசாய கிணற்றில் ஒரே புடவையில் மூன்று பேரும் சுற்றி கட்டிபிடித்த நிலையில் தற்கொலை செய்துகொண்டனர்.

மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

webdunia

 
 
அந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள், கட்டமைப்பு இல்லை என்பதால் இக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், ரூ.2 லட்சம் வரை பணம் கட்டி படித்த பல மாணவிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இக்கல்லூரியில் படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா எனற மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பணம் கட்டி ஏமாந்ததால், மாணவிகள் தற்கொலை. உயிரிழந்த கல்லூரியின் மாணவிகள் ....................

 
இதுபற்றி மேலும் படிக்க அடுத்தப் பக்கம் பார்க்க

கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். அப்போதே, மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.
 
ஐதராபாத் பல்கழைக்கழக மாணவன் தற்கொலைக்கு இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதைவிட மோசமான ஒரு பேரிழப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 

webdunia

 
 
இதற்கு யார் பொறுப்பேற்பது? அடிப்படை வசதி இல்லாத கல்லூரிக்கு அனுமதிகொடுத்து அதை நம்பி பணம் கட்டியவர்கள் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டவுடன் அந்த கல்லூரியில் படித்த மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஆனால், அரசு இதற்கான நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சரியான கட்டமைப்பும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கி வரும் அதிகாரிகளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்

Share this Story:

Follow Webdunia tamil