Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது
, புதன், 2 டிசம்பர் 2015 (02:23 IST)
அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.

இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும்.

லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.

வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது.

ஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம். அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களை சென்றடையும் என, இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள வெல்மினி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் சொலாங்கி தெரிவித்தார்.

வைஃபை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பாவிக்கப்படுவதால் அவை மருத்துவமனைகள், விமானங்கள், மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆதலால், லைஃபை தொழில்நுட்பம் மூலமாக, இந்தக் குறையை போக்கிக் கொள்ளலாம் என, எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட்டு ஹாஸ் 2011 இல் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் லைஃபை என்ற தொழில்நுட்பத்தை முதல் முறையாக தெரிவித்திருந்தார்.

வீட்டில் உள்ள வைஃபை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பாவிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள் ஒரு காரணம்.

டிசம்பர் மாதத்தில், குறிப்பாக அனேகமானோரின் வீடுகளில் வைஃபை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதற்கு காரணம் வீடுகளில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின்குழிழ்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொலைத் தொடர்புகளின் தங்களைக் கண்காணிக்கும் அமைப்பான ஓஃப்கொம் வைஃபையின் உறுதித்தன்மையை பரிசீலிக்க செயலிகளையும் உருவாக்கியுள்ளது.

பாரிஸில் நடந்துவரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று, உலகின் காடுகளை பாதுகாப்பது பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் நடக்கின்றன.

சீனா இப்போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு பெரிய திட்டங்களை கொண்டுவருகின்றது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil