திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவியை அவருடன் இருந்த 4 சீனியர் மாணவிகள் பினாயிலை குடிக்க வைத்து கொடுமை படுத்தினர்.
இதனால் மாணவியின் உணவு குழாய் பதிக்கப்பட்டது. வயிற்றுவலியால் துடித்த மாணவியை உறவினர்கள் ஊருக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த 4 மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் லட்சுமி, ஆதிரா, விஷ்ணு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தப்பித்துவிட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவியை மாநில பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை மந்திரி ஏ.கே.பாலன் சந்தித்த பிறகு, அந்த மாணவிக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும். படிப்பு முடிந்ததும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.