நவராத்திரியின் ஒன்பது நாட்களில் சக்தியின் ஒன்பது அம்சங்கள்

Webdunia
நவராத்திரியின் முதல் நாளில் துர்கையை சாமுண்டியாகவும், இரண்டாம் நாளில் வராகியாகவும், மூன்றாம் நாளில் இந்திராணியாகவும் எண்ணி வழிபட வேண்டும். நவராத்திரியின் நான்காம் நாளில் மகாலட்சுமியை வைஷ்ணவி தேவியாகவும், ஐந்தாம் நாளில் மகேஸ்வரி தேவியாகவும், ஆறாம் நாளில் கௌமாரி தேவியாகவும் பாவித்து பூஜிக்க வேண்டும்.

 
அனைத்து கலைகளையும் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவியை நவராத்திரியின் ஏழாம் நாளன்று சாம்பவியாகவும், எட்டாம் நாளன்று நரசிம்மதாரிணியாகவும், ஒன்பதாம் நாளன்று சரஸ்வதியாகவும் எண்ணி வழிபடுதல் வேண்டும்.
 
நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம்.  மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், “தசரா’ என்று அழைக்கின்றனர். 
 
நவதுர்க்கை:
 
வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, ஆகரி  துர்க்கை, லவண துர்க்கை. இவர்கள் துர்க்கையின் அம்சங்கள். 
 
அஷ்டலட்சுமி: 
 
ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி. இவை  லட்சுமியின் அம்சங்கம்.
 
அஷ்டசரஸ்வதி: 
 
வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள்  சரஸ்வதியின் அம்சங்கள். உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.
 
மூன்றாம் நாள்:
 
துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

அடுத்த கட்டுரையில்