Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான சைனீஸ் ஸ்டைல் மட்டன் சூப் செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்: 
 
மட்டன் - 1/2  கிலோ
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
மைதா - 2  மேசைக்கரண்டி
பச்சைபட்டாணி - அரை கப்
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
பட்டை - சிறுதுண்டு
மிளகு - 10
பால் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக்  கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம்  போட்டு நன்கு வதக்கவும்.
 
அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும். அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு  வேகவிடவும்.
 
வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும். சுவையான சைனீஸ் மட்டன் சூப்  தயா‌ர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கற்கள் உருவாகுவது ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments