Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவராத்திரி நாட்களில் கொலு அமைத்து விரதம் இருப்பதன் காரணம்...!

நவராத்திரி நாட்களில் கொலு அமைத்து விரதம் இருப்பதன் காரணம்...!
சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. நவராத்திரி தினங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. 

 
'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்திய ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி,  இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன. 
 
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும்  கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும்.  ஆனால் இந்த ஆண்டு ஒன்பது நாட்களோடு இன்னும் இரண்டு நாட்கள் சேர்ந்து நவராத்திரியை சிறப்பாக்குகிறது.  
 
நவராத்திரி நாட்களில், ஒவ்வொரு நாட்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக, பெண் குழந்தைகளை தேவியாக  பாவித்து பூஜிக்க வேண்டும். குழந்தைகள் முதல் மூதாட்டி வரையான பெண்களை அம்பாளாகவே கண்டு வணங்க வேண்டும்  என்பது ஐதீகம். பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட  அலங்கரிக்க வேண்டும். 
 
பலவித பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு தகுந்த உபசரிப்பு செய்து, அவர்களை மகிழ்விக்கிறோம். இதனால், முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின்  நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீஸ் ஆம்லெட் செய்ய தெரியுமா...!