Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நவராத்திரி காலங்களில் துர்கை அம்மனுக்கு சொல்லக்கூடிய மந்திரங்கள்!!!!

நவராத்திரி காலங்களில் துர்கை அம்மனுக்கு சொல்லக்கூடிய மந்திரங்கள்!!!!

நவராத்திரி காலங்களில் துர்கை அம்மனுக்கு சொல்லக்கூடிய மந்திரங்கள்!!!!
நவராத்திரி காலங்களில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை ராகுகாலவேளையிலும் நவராத்திரியிலும் ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தி வணங்கினால், வாழ்வில் எல்லா துக்கங்களும் விலகும். சிறுமியரை அம்பிகையாக பாவித்து வழிபடுவது வழக்கமாகும்.


 
 
நவராத்திரி விழாவின், ஒன்பது நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல், 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.

நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
முதல் நாளுக்குரிய போற்றிகள்:
 
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி  போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோட்டலில் செய்வதைப்போல் வெங்காய சாம்பார் எவ்வாறு செய்வது??