Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மஹிஷாசுரனை வதம் செய்ய ராஜராஜே‌‌ஸ்வரியாக புறப்பட்டாள்

மஹிஷாசுரனை வதம் செய்ய ராஜராஜே‌‌ஸ்வரியாக புறப்பட்டாள்
, சனி, 19 செப்டம்பர் 2009 (17:32 IST)
இ‌ன்று நவரா‌த்‌தி‌‌ரி‌யி‌ன் இர‌ண்டாவது நா‌ள். புர‌ட்டா‌சி மாத‌ம் 4‌ம் தே‌தி (செ‌ப்ட‌ம்ப‌ர்20), ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை.

இ‌ன்று நவரா‌த்‌தி‌ரி ‌விழா‌வி‌ல் மஹிஷாசுரனை வதம் செய்யப் புறப்பட்ட ராஜராஜே‌ஸ்வரியை பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். பரமசிவன், மகாவிஷ்ணு, பிரம்மா இவர்களின் கோபாவேசத்திலிருந்து வெளிவந்த அற்புத ஜோதி மண்டலம் சிவசக்தி முகமாகவும் மற்ற இருவர் அவளின் மற்ற அங்கங்களாகவும், வெளிப்பட பராசக்தியாக உருவெடுத்தாள்.

webdunia photoWD
சிவபெருமாளன் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், தேவேந்திரன் வஜ்ராயுதத்தையும் கொடுக்க, வில், அம்பு போன்றவற்றையும் தேவர்களிடமிருந்து பெற்ற அன்னை பராசக்தி ராஜராஜே‌ஸ்வரியாக மஹிஷாசுரனை அழிக்கப் புறப்பட்டாள்.

மாலை 6 ம‌ணி முத‌ல் இரவு 8 ம‌ணி‌க்கு‌ள் பூஜை செ‌ய்து ‌தீப‌ம் ஏ‌ற்றுவது ‌சிற‌ந்தது.

மு‌ல்லை, ம‌ல்‌லிகை, ரோஜா மல‌ர்களா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட மாலையை அ‌ணி‌வி‌த்து அழகுபடு‌த்தலா‌ம்.

நைவே‌த்‌தியமாக பு‌ளியோதரை படை‌க்கலா‌ம். கோதுமை‌யி‌ல் தயா‌ர் செ‌ய்த இ‌னி‌ப்பு வகைக‌ள், சோள‌ம் சு‌ண்ட‌ல் வை‌த்து பூஜை செ‌ய்யலா‌ம்.

இ‌‌ன்றைய ‌தின‌த்‌தி‌ன் பூஜை‌யி‌னா‌ல் கவலைக‌ள் ‌தீரு‌ம். கா‌ரிய வெ‌ற்‌றி ‌கி‌ட்டு‌ம். எ‌தி‌ரிக‌ளி‌ன் பல‌‌ம் குறையு‌ம். எ‌தி‌ர்‌பா‌ர்‌ப்புக‌ள் ‌யாவு‌ம் ‌நிறைவேறு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil