Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் யானை நெருஞ்சில்...!!

Advertiesment
அற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் யானை நெருஞ்சில்...!!
யானை நெருஞ்சில் சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.  

சிறுநீரக் கல் இருக்கும் பட்சத்தில் எதை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக  செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது.
 
யானை நெருஞ்சில் இலை சாறு சிறுநீரகத்தில் உருவாகும் ஆகிய பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது. சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண்  மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடு இவைகள் நீங்கும்.
 
பெண்களுக்கு ஏற்படும் வௌ்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கள் போன்ற நோய்களை குணப்படுத்தும். ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.
 
இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு, 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழப்பு போல் ஆகம். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும். மேலும் சொப்பனஸ்கலிதம், தாது உடைதல், சிறுநீ்ர் எரிச்சல் நீங்கும்.
 
யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் நீங்கும். யானை நெருஞ்சிலின் சமூலம்(அனைத்தும்) அரைத்து நெல்லி அளவு எருமைத்தயிரில் கலக்கி காலை ஒரு வேளை மட்டும் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், தேக எரிச்சல்  நீங்கும்.
 
இதன் இலையை இடித்து சூரணம் செய்து இரண்டு வேளைப் பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரை கூட்டி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். இதன் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலில் கலக்கி உண்டு வந்தால் சிறுநீரக, எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும்போது வலி ,  ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் !!