Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ...!

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ...!
செம்பருத்தி தாவரத்தில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். 
செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான். இதன் இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. 
 
செம்பருத்தி இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவையாகும். கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
 
மாதவிடாயைத் தூண்டக் கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி. முடிக்கு  நல்லது. இதழ்களின் உள்ள சாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.
 
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
 
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து  நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெய்யை வடிகட்டி சம அளவு தேங்காய்  எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
webdunia
இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள்  வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் உண்டால் குணப்படுத்தும்.
 
காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன்,  பொடுகு அகலும்.
 
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம்  பெறலாம்.
 
பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது  நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான நோய் இருந்தாலும் குணமாகும்.
 
செம்பருத்திப் பூவை 250 கிராம், 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர்  அதனை பிசைந்து வரும் சாற்றோடு, சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு  ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
 
செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு தடவைகள்  செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகளை உணவுகள் எடுத்து கொள்ளவேண்டும்.....?