Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையலறை பொருள்களை வைத்து நோய்களுக்கான தீர்வு...!!

Advertiesment
சமையலறை பொருள்களை வைத்து நோய்களுக்கான தீர்வு...!!
பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்சனைகள் ஆகியவற்றை தவிர்க்கவும்  உதவுகிறது.
ஜாதிக்காய்: பல்வலி தூக்கமின்மை தசைப்பிடிப்பு செரிமானமின்மை வயிற்றுப்போக்கு, மூட்டுவலி ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
 
இஞ்சி: மலச்சிக்கல், வயிற்று கோளாறு ஆகியவற்றை போக்குகிறது. நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் காயங்களை ஆற்றும் தன்மையை  அதிகரிக்கும் தன்மை இஞ்சியில் உள்ளது.
 
ஏலக்காய்: வாயுவை நீக்குதல் ஜீரண உறுப்புகளை திடப்படுத்துதல் சோர்வை போக்குதல், நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் தலைவலியை குறைத்தல் போன்ற பணிகளை ஏலக்காய் செய்கிறது.
 
சோம்பு: வாயுவை குறைத்தம் மற்றும் பெருங்குடல் நோயை குணமாக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது சோம்பு.
 
சீரகம்: சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும்.
 
வெந்தயம்: நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. மோருடன் சேர்த்து குடிக்கும்போது வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
 
ஓமம்: இதன் தைலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும். இதன் எண்ணெய் நுண்ணுயிர்களை அழிக்கும். வாயு தொல்லை, வயிற்றுபோக்கு, வாந்தி, வயிற்று வலி, ஜலதோஷம், புண், சிரங்கு, தொண்டை கோளாறு தீர்க்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாதம் என்பது என்ன...?; இவற்றை வராமல் தடுக்கும் உணவுகள் என்ன...?