Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புத மருத்துவகுணம் கொண்ட மாதுளம் பூ எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...!

அற்புத மருத்துவகுணம் கொண்ட மாதுளம் பூ எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...!
மாதுளையின் பழம், பூ, பட்டை, காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம் பூக்களை உலர்த்தி வைத்துக்கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் நிற்கும். மாதுளம் பூக்களை தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி வெப்பநோய் தீரும்.
 
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாக சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும்  உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 
கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும் அது மட்டுமல்லாது மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகுவதுடன் கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும்இ  வர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்குவதுடன் வெள்ளைப்படுதலும் குணமாகும்.
webdunia
மாதுளம் பூக்களை அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதித்து சுண்டியதும் இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து, வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில்  ரணம் போன்றவை குணமடையும்.
 
தினமும் காலையில் நாக்கு மாதுளம் பூக்களை மென்றுதின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஞ்சியின் பயன்களும் மருத்துவ குணங்களும்...!