Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவக் குணங்களை கொண்ட முருங்கை கீரை....!

Webdunia
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்க கூடியது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மனிதர்களுக்குத் தேவையான 20  அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.
 
முருங்கைக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும்  காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
 
முருங்கைக் கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும். முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போடலாம்.
சிறுநீர் சுலபமாகப் பிரிய, முருங்கைக்கீரையுடன் சீரகம் கால் ஸ்பூன், சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும். முருங்கை இலைகளை அரைத்துச்  சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலும் வயிற்றுப் பூச்சிகள் அழியும். இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை போகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments