Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்....!

Advertiesment
கோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்....!
கோடைகாலம் வந்தாலே வெயில் சுட்டெரிக்கும். அதனால் வியர்த்து கொட்டும். இதையொட்டி உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதுடன், சொரி, சிரங்கு, தேமல்,  படர் தாமரை, கொப்பளங்கள், அம்மை போன்ற தோல் நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தும். இதுதவிர வெயிலின் தாக்கத்தால் தோல் வறண்டு சாதாரணமாகவே அரிப்பு உண்டாகும்.
குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.
 
சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும், முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்க்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு சூடாக்கி அந்த நீரல் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.
 
குங்குமப் பூவை கொண்டு வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு சருமத்தை கொண்டு வரவும் உதவுகிறது.
 
கோடையில் உங்கள் கண்கள் பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள்  மெருகேறும்.
 
ஒரு ஸ்பூன் தேனும், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடுவது நல்லதல்ல என கூறக்காரணம் என்ன?