Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றாட உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது ஏன்...?

அன்றாட உணவு
Webdunia
நம் உடலுக்கு தேவையான அளவு இரும்பை உறிஞ்சாவிட்டால், அது இரும்புச் சத்து குறைபாடாக மாறிவிடும். இரும்புச் சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும். அப்போது அறிகுறிகள் தோன்றும். இரும்புச் சத்து குறைபாடு மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளில் ஒன்றாகும்.

பொதுவாக இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். இந்த சத்து இருந்தால் தான், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்.  இல்லையெனில் உடலில் இரத்தத்தின் அளவானது குறைந்து, இரத்த சோகை, ஞாபக மறதி போன்றவை ஏற்படும். 
 
இரும்புச் சத்து என்பது உங்கள் உடல் சரியாக செயல்பட மிகப்பெரிய உதவி செய்கிறது. எனவே, உங்கள் அன்றாட உணவில் போதுமான அளவு இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியம்.
 
இறைச்சி, மீன் மற்றும் கோழி போன்ற விலங்குகளின் உணவுகளில் ஹீம் இரும்பு காணப்படுகிறது. தாவரங்களை விட விலங்கின் இறைச்சியிலிருந்து 3 முதல் 4  மடங்கு அதிக இரும்பை தரவல்லது.
 
தாவரங்கள் மூலமும் நீங்கள் இரும்புச்சத்தை பெறமுடியும் ஆனால் அது குறைவாக உள்ளது. வைட்டமின் சி மூலத்தை சேர்ப்பதும் உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
 
பொதுவாகவே கீரைகளில் இரும்புச்சத்தானது அதிகம் இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்  அதிகம் நிறைந்துள்ளன.
 
இரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் குழந்தைக்கு ஆக்ஸிஜனை செலுத்துவதற்கும் இனப்பெருக்க உறுப்புகளை வளர்ப்பதற்கும் அதிக இரும்புச் சத்து  தேவைப்படுகிறது.
 
பருப்பு வகைகளை தவறாமல் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்தானது அதிகம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments