Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்ய...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 11/2 கப்
வெந்தயக் கீரை - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
தண்ணீர் - சுமார் 1/2 கப்
மிளகாய்த் தூள்  -1  டீஸ்பூன்
தனியாத் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகம், ஓமம்  - 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வெந்ததும், கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும். 
 
மேலும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அளவிற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் சிறிய துண்டுகளாக எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரித்து, தவாவில் வெண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையானவெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments