யாரெல்லாம் இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்...?

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (16:52 IST)
இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, ஒமட்டல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சியில் அதிகமாகவே உள்ளது.


இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் நமது செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒமட்டல் என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க:
வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் இஞ்சி !!

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.

இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.

Edited by Sasikala

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments