Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலின் சோர்வை நீக்கி ஆற்றலை தக்கவைக்க உதவும் பழங்கள் !!

Advertiesment
Fruits
, புதன், 12 அக்டோபர் 2022 (13:18 IST)
பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவதால் வைட்டமின்கள், இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இது சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், ஆற்றலைத் தக்கவைக்க உதவும்.  


தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மாதுளையில் நார்ச்சத்து, நீர்சத்து, மாவுச்சத்து என அதிக அளவுச் சத்துக்கள் உள்ளன. இந்தப் பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை இது வெளியேற்றும் எனவே நாவறட்சியைப் போக்கி உடல் சோர்வை நீக்கும்.

மேலும் படிக்க: மலச்சிக்கலை போக்கி அற்புத நிவாரணம் தரும் செவ்வாழைப்பழம் !!

நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ள பழம் தான் அன்னாசி பழம். அண்ணாச்சி பழம் நமது உடலுக்கு நல்ல ஆற்றலைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

கொய்யா பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு கொய்யா பழத்தைக் கொடுத்தால் அவர்களது எலும்பு வலிமையாக இருக்கும். சொரி, சிரங்கு, இரத்த சோகை இருந்தால் கொய்யா பழத்தை சாப்பிட்டு வரும்போது சீக்கிரத்தில் குணமாகும்.

பப்பாளி பழத்தில் விட்டமின் சி, பீட்டாக்கரோட்டீன், நார்ச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளது. இந்த பப்பாளி பழத்தை முக்கியமாக குழந்தைகளுக்குக் கொடுப்பதால், அவர்களது உடல் மற்றும எலும்பு நன்றாக வளரும். நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள் பப்பாளி பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்

சப்போட்டா பழத்தில் மாவுச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியன அதிக அளவில் உள்ளது. எனவே, இது நமது உடல் இரத்த ஓட்டத்திற்கு மிக மிக நல்லது. ஆனால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்தப் பழத்தை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்...?