Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது தவிர்க்க வேண்டியது என்ன...?

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது தவிர்க்க வேண்டியது என்ன...?
எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணையை காய்ச்சி தலைக்கு செய்தது குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால்  எண்ணையை காய்ச்சும்போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் சளி பிடிப்பதை நாம் தவிக்க முடியும்.

நல்லெண்ணெயில் நீங்கள் குளிப்பதாக இருந்தால் சூரிய உதயத்திற்கு பின் குளிப்பது உத்தமம். நம் உடல் முழுவதும் நன்றாக நல்லெண்ணெய் தடவிய பின், நாம்  சூரிய வெளிச்சம் உள்ள இடத்தில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை நிற்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு காரணம், சூரிய ஒளி நம் உடலில்  படும்போது, சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை உடல் விரைவாக உருஞ்சும். மேலும் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். அதிகாலையில்  நான்கு, ஐந்து மணி அளவில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
 
எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நாம் கண்டிப்பாக சுடுநீரில்தான் குளிக்க வேண்டும். நீங்கள் வழக்கமாக குளிர்ந்த நீரில் குளிக்கும் நபராக இருந்தாலும், அன்று  ஒருநாள் நீங்கள் சுடுநீரில் தான் கட்டாயம் குளிக்க வேண்டும். குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. தலைக்கு சீயக்காய், அரப்பு, சாதம் கஞ்சி  போன்றவைகளை பயன்படுத்தலாம்.
 
தலைக்கு குளிக்கும் அன்று அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, பிறந்த நட்சத்திரம் மற்றும் திதி, பிறந்த நாள், விரத நாட்கள் போன்ற நாட்களாக  இருக்கக் கூடாது. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு போன்ற நாட்களில் தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. ஏனென்றால் இந்த நாட்கள்  குளிர்ச்சியான நாட்கள் ஆகும்
 
குளிர்ச்சியான நாட்களில் பொதுவாக தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பது விதி. நம் உடல் சூடான நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்  குளிக்கலாம். பெண்களுக்கு வெள்ளி, செவ்வாய் நாட்களும், ஆண்களுக்கு சனியும், புதனும் ஆகும்.
 
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று நாம் உறங்கக்கூடாது, பழைய சாதம், கற்றாழை, மோர், இளநீர், தாம்பத்தியம் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.  மேலும் குளிர்ச்சியான உணவு பொருட்களை உண்பதை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல்  போன்ற பிரச்சனைகள் தீரும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிடுகிடுக்க செய்யும் கொரோனா பலிகள்: சீனாவை முந்தி செல்லும் நாடுகள்!