Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த வகையான முகக்கவசம் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்...?

எந்த வகையான முகக்கவசம் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்...?
இன்றைய சூழலில் முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது.


இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும். சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.
 
சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும். 
 
முகக்கவசம் அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும். முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.
 
வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.
 
எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம் சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். 
 
எலாஸ்டிக் உள்ள முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும். முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்க வேண்டும். அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏற்றாற்போல் முகக்கவசம் சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். அதிக தளர்வும் கூடாது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ் !!