பாகற்காய் ஜூஸ்: உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரிக்கும்.
பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழித்து விடும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
வேப்பிலை ஜூஸ்: இது உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஆனால் வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து விடலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ் வகையாகும்.
கேரட் ஜூஸ்: நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படும். கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுத்துவிடும்.
சுரைக்காய் ஜூஸ்: உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தால் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்.
அருகம்புல் ஜூஸ்: அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகளை தடுக்கும்.
கற்றாழை ஜூஸ்: கற்றாழை சரும அழகை மட்டும் அதிகரிக்க பயன்படுவதில்லை, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தான் பயன்படுகின்றன. குறிப்பாக கற்றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவி செய்யும்.