Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன...?

இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன...?
நாட்டு புறங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். 

நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல்  வளரக்கூடியது. 
 
மாதவிடாயை முறைப்படுத்துகிறது. மேலும் கருப்பை நீர் கட்டிகளையும் இந்த கஷாயம் குணப்படுத்துகிறது. இன்சுலின் இலைகளை போலவே கறிவேப்பிலைக்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. 
 
இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.
 
உடலில் ஏற்படும் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல்  ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே  சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது. 
 
இன்சுலின் இலைகளை பயன்படுத்தி முகத்தில் ஏற்படக் கூடிய பருக்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு பயன்படக் கூடிய ஒரு வெளிப்பூச்சு மருந்தை தயார்  செய்யலாம்.
 
இதற்கு தேவையான பொருட்கள்: இன்சுலின் இலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் சம அளவு இன்சுலின் இலைச் சாறை சேர்க்க வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவேண்டும். இதை நன்றாக கலக்கி முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகிய இடங்களில் தடவி வர வேண்டும்.  இதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேப்பங்கிழங்கில் பயன்தரும் இத்தனை சத்துக்கள் உள்ளதா...?