Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்க என்ன செய்யவேண்டும்...?
தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடல்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடல் சோர்வை குறைத்து ரத்தத்தை தூய்மை அடைய செய்யும்.
 
செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து காய்ச்சி வடிகட்டி  நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.
 
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம் அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை  தவிர்க்க வேண்டும்.
 
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
 
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து பருப்புடன் ஊற்றி, கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம்  விருத்தியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவைமிகுந்த கோதுமை அல்வா செய்ய !!