Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும்போது கவனிக்கவேண்டியவைகள் என்ன...?

Webdunia
தலைமுடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். அதற்கு தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால்  வேர்கள் எண்ணெய்யை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். 


மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.
 
பூஞ்சைகள், காற்று மாசுபாட்டால் தலைமுடி சேதமாகுதல், தொற்று, பேன் என தலைமுடியை சேதப்படுத்தும் விஷயங்கள் பல இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு  தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான். இதைத் தொடர்ந்து சரியாகச் செய்துவர முடிப் பிரச்சனை இருக்காது.

தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும். பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
 
பொடுகுத் தொல்லைக்கு தலைமுடி வறட்சியும் முக்கியக் காரணம். இன்று பொடுக்குத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். அதற்கு எண்ணெய் வைக்காதது முக்கியக் காரணம். தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை  உறுதியாக்குகிறது. பொடுகுத் தொல்லையும் இருக்காது.
 
தலையில் எண்ணெய் தேய்த்த உடனே தலைமுடியை சீவ வேண்டாம். குறிப்பாக சிக்குகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் தலைமுடி சேதம் அடைய வாய்ப்பு உள்ளது
 
தலையில் பல மணி நேரத்திற்கு எண்ணெய்யை அப்படியே விட்டு விடக் கூடாது. அப்படி செய்தால், அது முடியில் அதிகம் அழுக்கு சேர வழிவகுத்து விடும்
 
அளவிற்கு அதிகமான அளவு எண்ணெய்யை முடிக்கு தேய்க்கக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால், அதிக அளவு ஷாம்பூவை பயன்படுத்த வேண்டிய சூழல் உண்டாகும். இதனால் முடி வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலைமுடியை இறுக்கி கட்டக் கூடாது. எண்ணெய் தேய்த்த பின் சற்று தளர்வாகவே முடியை விட  வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments