Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரக நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Webdunia
'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும்  சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது.    

ஒரு கரண்டி சீரகத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இதை பருக  வேண்டும்.    
 
செரிமான கோளாறுகளின் அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயு தொல்லை ஆகியவை இருக்காது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக வேலை செய்வதற்கு இரும்பு சத்து அவசியம். 
 
சீரகத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. தினசரி நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்தில் 7 விழுக்காடு ஒரு குவளை (டம்ளர்) சீரக நீர் மூலம் கிடைக்கிறது. நோய் தொற்றிலிருந்து உடலை பாதுகாப்பதற்கு உதவக்கூடிய வைட்டமின்கள் 'ஏ' மற்றும் 'சி' சீரக நீரில் காணப்படுகிறது. 
 
இரத்தசோகைக்கான சிகிச்சை உடலில் போதுமான அளவு இரும்பு சத்து இல்லையெனில் தேவையான எண்ணிக்கையில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகாது. அந்த நிலையில் உடல் முழுவதும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) நிறைந்த இரத்தம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். 
 
சீரக நீரில் காணப்படும் அதிகப்படியான இரும்பு சத்து இக்குறைபாட்டை நீக்குகிறது.   சுவாச மண்டலத்திற்குப் பாதுகாப்பு நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அகற்றுவதற்கு சீரக நீர் உதவுகிறது. 
 
சளி மற்றும் இருமலை உருவாக்கும் கிருமிகளை சீரக நீரிலுள்ள சத்துகள் அழிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கிறது   மூளையின் திறனை மேம்படுத்தும்  இயல்பு சீரகத்திற்கு உள்ளது. வேலையில் கவனம் செலுத்தவும், ஞாபக சக்தியை கூர்மைப்படுத்தவும் சீரகம் உதவுகிறது. தூக்கமின்மையை போக்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments