Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடும்போது ஏற்படும் பாதிப்புகள்...?

அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடும்போது ஏற்படும் பாதிப்புகள்...?
அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடும்போது உடலில் புரதத்தின் அளவு அதிகமானவுடன் உடல் அமைப்பானது மாறுபட்டு உடல் எடை அதிகரிப்பதோடு  மட்டுமின்றி நமது உடலானது ஒரு ஒழுங்கற்ற நிலையில் மாறுகிறது.

அசைவ உணவு பிரியர்கள் அசைவ உணவை உண்ண ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கான அளவை மறந்து விடுவது வழக்கம். அதிக அளவிலான அசைவ  உணவுகளை உண்ணும்போது புரோட்டீன் அளவு உடலில் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிக ஆற்றல் நிரம்பிய புரோட்டின் உடலில் அதிகமாக சேரும்போது  தூக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி அசைவ உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரங்களில் எடுத்துக்கொள்கின்றன.
 
பொதுவாகவே அசைவ பிரியர்கள் சைவ உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள மாட்டார்கள். இதன் விளைவாக வைட்டமின்கள் அதிகமாக உள்ள  காய்கறிகளையும் பழங்களையும் இவர்கள் உண்ணாததன் காரணமாக இவர்களின் சருமம் பொலிவு பாதிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில்  உடலில் சேர்வதில்லை.
 
அசைவ உணவுகளில் சில இறைச்சிகளில் உடல்நிலை கோளாறு காரணமாக அவற்றின் நோய்கள் நமக்கு தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி  இறைச்சிகளின் நேரம் தாமதத்தின் காரணமாகவும் சில இறைச்சிகளின் காலநிலை மாற்றங்கள் காரணமாகவும் நம் உடலில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள்  உள்ளன.
 
அசைவ உணவுகளில் குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளதன் காரணமாக அடிக்கடி மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும்  கொழுப்பானது சற்று அதிகமாக காணப்படுவதால் இது இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
அசைவ உணவுகளில் நன்மைகள் அடங்கி இருந்தாலும் அதை அளவுடன் உண்டால் மட்டுமே அது நன்மை பயக்கும் அளவுக்கு மீறினால் நன்மைகளுக்கு பதிலாக இரு மடங்கான தீமைகளை விளைவிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்தை பொலிவோடு மின்ன செய்யும் அழகு குறிப்புகள்....!!