உலர்திராட்சைப் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன...?

சிலர் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும்  காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை வரும்.
 
அஜீணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த  திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து அருந்தி குடல் புண்கள் குணமாகும்.
 
மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உடலில் சீராண  உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம் ஆகாது. இவர்கள் மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை  தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்பு வலி, தலைவலி என பல உபாதைகள் உருவாகும். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது  உலர்ந்த திராட்சைகளே.
 
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பிரச்சனை தீர உலர் திராட்சை பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து  சாப்பிட்டால் வலி மறைந்து போகும். எலும்பு மஜ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது.
 
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப் பின்னர் காலையிலும். மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழு நாள்கள் சாப்பிட்டு  வந்தால் மூலரோகம் குணமடையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்ன தெரியுமா...?