Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?
அல்சர் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மற்றும் துரித உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.
நேரம் தவறி உணவு உண்பதாலும், சரியான இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளாததாலும், மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுப்பதாலும் அல்சர் நோய் ஏற்படுகிறது.
 
உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறு குடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களே குடல் புண் (அல்சர்) என்றழைக்கப்படுகிறது. பொதுவாக காரமான உணவு உட்கொள்வது, சரியாக உணவு உட்கொள்ளாதது, மன அழுத்தம் ஆகியவை தான் வயிற்று புண் வருவதற்கு  காரணம் என்று பொதுவாக கூறப்படுகிறது.
 
அமிலம் உணவுக்குழாயில் அதிகமாக படரும் போது, அது அந்த சளிப்படலத்தை பாதித்து புண்களை ஏற்படுத்திவிடுகிறது.
webdunia
அல்சருக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள்: காலிஃப்ளவர் ,முட்டைகோஸ், முள்ளங்கி. ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, கேரட், பிரக்கோலி. கீரை வகைகள், பூண்டு, தேன், மஞ்சள் இவைகளே அல்சர் நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள  வேண்டிய உணவுப்பொருள்கள் ஆகும்.
 
அல்சர் நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: எண்ணெய்யில்  தயாரிக்கப்பட்ட உணவுகள், காரம், கோலா, குளிர்பானங்கள், காபி, சாக்லேட், அசிடிக் நிறைந்த உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, மதுபானம், சிகரெட்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொடுகு தொல்லை பிரச்சனையை முழுவதுமாக நீக்கும் இயற்கை முறையிலான டிப்ஸ்...!!