Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காய்கறி செடிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் என்ன தீமைகள்...?

காய்கறி செடிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் என்ன தீமைகள்...?
முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.

முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.
 
பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால்,  கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
 
கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் குளிர்காலத்தில் ஸ்குவாஷ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் தான் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.
 
பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகள் தான் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு. எனவே, முடிந்தவரை காய்கறிகள் வாங்கும் போது, உழவர் சந்தை போன்ற இடங்களில் சென்று வாங்குங்கள். கண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, கூடுதலாக பதப்படுத்தி வைக்க இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.
 
இதில் இருந்து தப்பிக்க, ஒரே வழி வீட்டு தோட்டம் தான். மொட்டை மாடியில் எளிதாக வீட்டுத் தோட்டம் அமைப்பது எவ்வாறு என அறிந்து செயல்படுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏலக்காய் டீயை அடிக்கடி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!