Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விந்தணு குறைபாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

Webdunia
ஆண்கள் அணியும் உள்ளாடையானது மிகவும் இறுக்கமானதாக இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் ஆண் விதையானது அதிக வெப்பத்தால் வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். 

பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பார்கள். அவ்வாறு வைக்கும்போது மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு பெரும் பிரச்சினையாக அமைவதோடு மட்டுமல்லாமல் அதன் உற்பத்தியின் அளவைக் பெருமளவு குறைத்துவிடும்.
 
அலுவகத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. மன அழுத்தமானது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைபாடு. சில சமயங்களில் இவை ஆண் மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
 
ஆல்கஹால் அதிகம் உள்ள பானங்களை அதிகம் பருகினால், அவை உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைக்கும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் குறையும்.
 
சிகரெட்டில் உள்ள புகையிலையானது, விந்தணுவின் உற்பத்தியை குறைப்பதோடு, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடும்.
 
பெரும்பாலான ஆண்கள் வெந்நீரில் குளிப்பார்கள். வெந்நீரில் உள்ள அதிகப்படியான வெப்பம் காரணமாக விந்தணுவின் தரம் குறைவதோடு, அதன் உற்பத்தியும்  பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது.
 
எண்ணெய்யில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 
 
ஆண்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியாகும் அதிகபடியான வெப்பமானது, விந்தணுவின் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments