Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்ப காலத்தில் மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்ன...?

கர்ப்ப காலத்தில் மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்ன...?
கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகரிப்பதும் ஒரு காரணமாகும். உடல் எடை கர்ப்ப காலத்தில் அதிகரிப்பதால், இந்த வலியானது இடுப்பு, கால் மூட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் வரும்.

உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதால், கீழே உட்கார்ந்து எழும்போது மணிக்கட்டில் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் கடுமையான வலிக்கு உள்ளாகும். மேலும்  இந்த வலியானது கொஞ்சம் கொஞ்சமாக கைக்கும் வந்துவிடும்.
 
தூங்கும் நிலையினாலும் வலிகளானது ஏற்படக்கூடும். உதாரணமாக, இடது பக்கமாகவே இரவு முழுவதும் தூங்கினால், காலையில் எழும் போது இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படக்கூடும். சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஹைப்போ தைராய்சமானது வரக்கூடும். அப்படி ஹைப்போ தைராய்டிசம் வந்தால்,  அவை மூட்டு வலியை ஏற்படுத்தும்.,
 
கர்ப்ப காலத்தில் இடுப்புத் தசைநாண்கள் மற்றும் தசைநார்களை ரிலாக்ஸ் செய்யும் ஹார்மோன்களானது வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படும்  ஹார்மோன்களானது உடலின் மற்ற மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் மற்றும் தசைநார்களை தளர்வடையச் செய்வதால், மூட்டு வலிகள் ஏற்படுகின்றன.
 
தற்போது பெரும்பாலான பெண்கள் ஒன்பது மாதம் வரை அலுவலகத்திற்கு சென்று வேலைப் பார்க்கிறார்கள். இப்படி அவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து, நின்று வேலை செய்வதால், அவர்களுக்கு முதுகு வலி, மூட்டு வலி, கணுக்கால் வலி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறைய செய்யவேண்டிய குறிப்புகள் !!