Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்கள் என்ன...?

Blood Cleaning
, செவ்வாய், 17 மே 2022 (11:30 IST)
பெரும்பாலும் துரிதமான வாழ்க்கை முறை காரணமாகவும் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். மன அழுத்தத்தை தொற்றுநோய் பரவல் பீதி மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பதற்றம், கோபம், மன சோர்வு ஆகியவை ஏற்படுகிறது.


உயர் ரத்த அழுத்தத்தில், இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் இரத்த ஓட்டத்தின் போது, இதயம் வழக்கத்தைவிட கடினமாக வேலை செய்ய தேவைப்படுகிறது. இது காலப்போக்கில் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

உயர் இரத்த அழுத்த பிரச்சனை பெரும்பாலும் ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற சுகாதார சிக்கலுக்கு வழிவகுக்கும்.

அதேபோல, குறைந்த இரத்த அழுத்தம் அல்லது ஹைபோடென்ஷன் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வழக்கமான தலைவலி, மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகளாகும் என்று நிபுணர் கூறுகிறார்.

உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலை பாரம் அல்லது தலை வலியை உணரலாம். பலவீனமாக அல்லது ஊக்கமின்மை அல்லது நிலையின்மையை உணரலாம்.

இரட்டை பார்வை அல்லது மங்கலான பார்வையை உணரலாம். மார்பில் கூர்மையான வலி அல்லது பாரமாக உணரலாம்.

ஒழுங்காக மூச்சுவிட முடியாதவாறு உணரக்கூடும். உங்கள் சொந்த இதய துடிப்புகளை உணரலாம். மிகவும் அரிதாக அடர்ந்த நிற சிறுநீர் அல்லது சிறிது பழுப்பு நிற சிறுநீரை கவனிக்கலாம்.

தினசரி உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை திறமையாக கட்டுபடுத்த உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர் இரத்த அழுத்தத்தை கண்டறியாமல் விடுவதால் என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும்...?