Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொப்புளில் இந்த எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதால் என்ன பயன்கள்...?

தொப்புளில் இந்த எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதால் என்ன பயன்கள்...?
தேங்காய் எண்ணெய்: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்: இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி,  மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகின்றன.
 
வேப்பெண்ணெய்: வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.
 
எலுமிச்சை எண்ணெய்: எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.
 
பாதாம் எண்ணெய்: சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து  நாட்களில் முகம் பளபளப்பாகிறது.
 
ஆலிவ் எண்ணெய்: தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து  போகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3.50 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!