Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !!

தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவதால் என்ன பயன்கள் !!
பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி,பொட்டாசியம், செம்பு, நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் எ நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் கண் பார்வையினை அதிகரிக்க உதவும்.
 
பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.இவை மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் உங்களின் குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்த  உதவுகின்றது.
 
பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உங்கள் சருமம் பொலிவாக மற்றும் அழகாக மாற வழி வகுக்கின்றது.
 
தினமும் பப்பாளி பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களின் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும். 
 
பப்பாளி பழத்தில் அதிக அளவு உள்ள நார்ச்சத்தானது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும்.எனவே நீரிழிவு நோயாளிகள்  தயங்காமல் தங்கள் உணவில் பப்பாளியினை சேர்த்துக்கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரீன் டீயில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் !!