Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பலன்கள் !!

Advertiesment
Avocado Fruit
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (11:01 IST)
அவகோடா பழத்தில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன. ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.


பழங்களிலேயே அதிக அளவு கலோரி கொண்ட பழம் அவகோடா பழம். கண்களுக்கு பார்வை திறனை அளிக்கும் வைட்டமின் ஏ இதில் தாராளமாக உள்ளது. இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு அடைக்காமல் பார்த்துக் கொள்ளும்.

அவகோடா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மேலும் உடல் உறுதி பெற உதவுகிறது. வயிற்றில் அதிகமாக புளிப்புத் தன்மையுள்ள பொருட்கள் சேர்ந்து வயிற்று வலி ஏற்பட்டால், பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே குணமாகும். இதே போல் ஐந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். இதனால் வயிற்று வலி பூரணமாக குணமாகும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயையும் உடம்பில் தேய்த்து வர வேண்டும்.

அவகோடா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே பருவகால நோய்களை நம்மை அண்டாமல் இருக்க இதனை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். தோல் நோயால் அவதிப்படுபவர்கள் அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை உடம்பு முழுவதும் நன்கு தேய்த்து குளித்து வர வேண்டும். இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 6,168 பேர் பாதிப்பு; 58 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!