Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்புச்சாறு குடிப்பதால் என்ன நன்மைகள் உண்டாகும்...?

Webdunia
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை  உள்ளது.

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக  புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
 
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால்  ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 
 
ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து  கரைந்துவிடும்.
 
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.  எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
 
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.  இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
 
கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில்  காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீவிர உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்: முக்கிய எச்சரிக்கை

காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பது நல்லதா? ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?

ஒரே சமயத்தில் இதய வால்வு மாற்று சிகிச்சை, பெருந்தமனி ஒட்டு சிகிச்சை! - சிம்ஸ் மருத்துவமனை சாதனை!

பிரிட்ஜ் எல்லாம் வேண்டாம்.. மண்பானை தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்கள் இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments