Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குப்பைமேனியை ஜூஸாக அருந்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

Kuppaimeni Leaves
, சனி, 1 அக்டோபர் 2022 (19:29 IST)
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த மருந்து பொருளாகவும் குப்பைமேனி உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், சீராக வைத்துக் கொள்ளவும் குப்பைமேனி பயன்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் குப்பைமேனியை ஜூஸாகவோ அல்லது வேறு ஏதேனும் பிடித்தமான முறையில் அவ்வப்போது உட்கொள்வது நல்லது.

தேவையில்லாத முடி வளரும் பகுதிகளில் மஞ்சள் பொடியுடன் சேர்த்து குப்பைமேனியை அரைத்து தடவுவதன் மூலம் அந்த முடிகளை நிரந்தரமாக அகற்றலாம். குப்பைமேனியில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது எப்போதும் இளமையான தோற்றத்தில் வைத்துக் கொள்ள  உதவுகிறது. சளி மற்றும் இருமல் தொல்லையை போக்க குப்பைமேனி உதவுகிறது. எனவே சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குப்பைமேனியை கசாயமாக உட்கொள்வது நல்ல பயனை அளிக்கும்.
 
விஷக் கடிக்கு ஓர் சிறந்த மருந்தாக குப்பைமேனி திகழ்கிறது. குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதன் சாறை விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்துவதால், அவர்கள் உடலில் உள்ள விஷம் வெளியேறும். 
 
தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, புண், காயம், ஊறல், சிரங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக குப்பைமேனி உள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் குப்பைமேனி இலைகளை நசுக்கி  தடவுவதால் தோல் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். 
 
தேவையில்லாத கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மை குப்பைமேனிக்கு உள்ளதனால், முகப்பரு பிரச்சனைக்கும் சிறந்த மருந்தாக குப்பைமேனி திகழ்கிறது.
 
குடல் புழுக்களை நீக்க குப்பைமேனி உதவுகிறது. எனவே குப்பைமேனியை ஜூஸாக அருந்துவதன் மூலம் குடல் புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறும். இதன் மூலம் குடல் சுத்தமாகும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யும் அதிமதுரம் !!