Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினந்தோறும் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வருவதால் என்ன பலன்கள்...?

தினந்தோறும் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வருவதால் என்ன பலன்கள்...?
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:57 IST)
முள்ளங்கியில் பைபர், ரிபோபிளேவின், பொட்டாசியம், காப்பர், விட்டமின் பி6, மக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


முள்ளங்கியை சாம்பார், பொரியல், என பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம். முள்ளங்கி சாறில், நோயை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும், ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால், விரைவில் நோய் குணமாகும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வெகுநாளாக சரியாகாத மூலநோய் கூட, பூரணமாக குணமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைகளுக்கு, சிறு வயதிலிருந்தே முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் ஞாபக சக்தி பெருகும், மூளை சிறந்த வளர்ச்சி அடையும்.

முடி உதிர்தல் மற்றும் பொடுத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கி சாறு நல்ல தீர்வு தருகிறது. தைராய்டு கோளாறுகள் இருப்பவர்கள் சிவப்பு முள்ளங்கி சாற்றினை குடிக்கலாம்.

முள்ளங்கி சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான காலிப்ளவர் முட்டை பொடிமாஸ் செய்ய !!