Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணைக்கிழங்கினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள் !!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (14:49 IST)
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆன்ஸிடென்ட் சத்துக்கள் அதிகம் கொண்டது இந்த கருணைக்கிழங்கு. அதனால் முடக்குவாதம் உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர முடக்குவாதம் குணமாகும்.


உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக் கூடியது இந்த கருணைக்கிழங்கு. கருணைக்கிழங்கில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச்சத்து உட்பட பல சத்துக்களை தனக்குள்ளே கொண்டுள்ளது.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணமாகும். பசியை தூண்டி இரைப்பைக்கு நல்ல பலம் சேர்க்கக் கூடியது.

மூலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை முற்றிலும் குணமாக்க விரும்பினால் கருணைக்கிழங்கினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மூலத்தினால் உண்டாகக்கூடிய எரிச்சல் குணமாக்கும்.

கருணைக்கிழங்கு கல்லீரலை சுறுசுறுப்பாக்கக்கூடியது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் இயக்கத்தை சீராக்குகிறது.

கருணைக்கிழங்கு உடலை குளிர்விக்கும் உணவு என்பதால் இதனை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கருணைக்கிழங்கினை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments