Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Webdunia
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.


நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
 
சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம்  உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
 
சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி  விடுகின்றன.

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மனஅழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள்  உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண  சக்தியைத் தூண்டும்.
 
தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும்  சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments