Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீரகத்தை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...!

சீரகத்தை பயன்படுத்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...!
சீரகம், ஏலம் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட தீரும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்து சாப்பிட எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
* சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர் பருகுவது அவசியம். சீரகத்தில் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. அது இளமையை தக்கவைக்க உதவும்.  சீரக நீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்கும். முடியின் வேர்கால்கள் வளர்வதற்கும் உதவும். முடி உதிர்தலையும், முடி இழப்பையும் தடுக்கும்.
 
* மலச்சிக்கலை போக்க, சீரகத்தில் உள்ள நார்சத்து உதவும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன்  கிடைக்கும்.
 
* சீரக கஷாயம்: சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து வருவது நல்லது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
* இரத்த அழுத்தம் இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழத்ததை சீராக  வைத்துக் கொள்ளும்.
 
* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 
* அடிக்கடி வயிற்று கோளாறு இருந்தால் வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் பாதி சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள்  வயிற்று  கோளாறு குணமாகும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள ஸ்பெஷல் பழம் பொரி செய்ய...!